Connect with us

மகாராஜா இயக்குநருக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்த படக்குழு – வைரல் போட்டோ..!!

Cinema News

மகாராஜா இயக்குநருக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்த படக்குழு – வைரல் போட்டோ..!!

விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குநர் நித்திலனுக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்து படக்குழு கவுரவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோடும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என வெறித்தனமான ரசிகர்களால் அன்போடு அளிக்கப்படும் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான திரைப்படமே மகாராஜா.

குரங்குபொம்மை என்ற அற்புதமான படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி ,நட்டி , மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் சத்தமின்றி வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஆரவாரமாக வாரிக்குவித்தது .

இந்நிலையில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநரானாக நித்திலன் சாமிநாதனுக்கு விலையுயர்ந்த BMW சொகுசு காரை பரிசாக கொடுத்து படக்குழு கவுரவித்துள்ளது.

இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிறப்பாக தொடங்கியது விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top