Connect with us

பல வருடங்களுக்கு பின் சென்னையில் இறுதிப்போட்டி – வெளியானது ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை..!!

Featured

பல வருடங்களுக்கு பின் சென்னையில் இறுதிப்போட்டி – வெளியானது ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை..!!

ரசிகர்கள் அனைவரும் செம ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் முழு அட்டவனையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஐபிஎல் தொடரையும் நிச்சயம் பிடிக்கும் இன்னும் சொல்லபோனால் இந்த தொடர் அனைவர்க்கும் மிகவும் பிடித்த தொடராக மாறிவிட்டது .

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் செம ஆவலாக காத்திருந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி சென்னையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பு தொடரின் பத்தி அட்டவணையை மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது தொடரின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 07ம் தேதி வரை மட்டுனமான போட்டியின் அட்டவனை மட்டுமே வெளியிட்டுள்ள BCCI . மீதமுள்ள போட்டிக்கான அட்டவனைகள் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் வெளியாகும் தெரிவித்திருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடரின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் அட்டவணையின் இரண்டாம் பகுதி, பிளேஆஃப்கள் உட்பட 52 போட்டிகளை கொண்டுள்ளது. இதில் ஐபிஎல் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதன்பிறகு தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின் சென்னை மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 21-ம் தேதி முதல் தகுதிச் சுற்று போட்டியும் மற்றும் மே 22-ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

மே 24-ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி சென்னையில் நடைபெறும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவ.10ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Featured

To Top