Connect with us

CISF படையில் முதல் முறையாக பெண்கள் மட்டும் கொண்ட ரிசர்வ் பட்டாலியன்..!!

Featured

CISF படையில் முதல் முறையாக பெண்கள் மட்டும் கொண்ட ரிசர்வ் பட்டாலியன்..!!

இந்தியாவில் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு பிரிவுகளில் ஒன்றான CISF படையில் முதல் முறையாக பெண்கள் மட்டும் கொண்ட ரிசர்வ் பட்டாலியன் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (CISF) முதல் முறையாக 1000 பெண்கள் மட்டும் அடங்கிய தனி ரிசர்வ் பட்டாலியன் அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்படையில் தற்போது 12 ரிசர்வ் பட்டாலியன்கள் உள்ளன. சீனியர் கமாண்ட் அதிகாரி தலைமையில் பெண்கள் பட்டாலியன் இயங்கும். ஒரு பட்டாலியன் என்பது 500 -1500 பேரைக் கொண்ட குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள பல முக்கிய பொறுப்புகளில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாதுகாப்பு படையின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான CISF படையில் பெண்கள் மட்டும் கொண்ட ரிசர்வ் பட்டாலியன் கொண்டுவரப்பட்டுள்ளது பலரது பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகநாயகனின் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Featured

To Top