Connect with us

புத்தம் புது கெட்டப்பில் சூர்யா – சூர்யா 44 படத்தின் பர்ஸ்ட் ஷாட் வீடியோ வெளியானது..!!

Cinema News

புத்தம் புது கெட்டப்பில் சூர்யா – சூர்யா 44 படத்தின் பர்ஸ்ட் ஷாட் வீடியோ வெளியானது..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் பர்ஸ்ட் ஷாட் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா 2 திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இதையடுத்து நடிகர் சூர்யாவின் 44ஆவது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட வைத்ததது .

LoveLaughterWar என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் ஷாட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது .

புத்தம் புது கெட்டப்பில் செம மாஸாக இருக்கும் சூர்யா கடற்கரையில் பெட்டி படுக்கை உடன் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

இதோ அந்த சிறப்பான தரமான வீடியோவை பார்த்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..? தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top