Connect with us

‘லப்பர் பந்து’ தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்..!!

Cinema News

‘லப்பர் பந்து’ தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்..!!

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘லப்பர் பந்து’ படத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமே ‘லப்பர் பந்து’ .

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் TSK , பாலசரவணன் தேவதர்ஷினி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி இப்படத்தை கிரிக்கெட் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் . அந்தவகையில் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘லப்பர் பந்து’ படத்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் கூறிருப்பதாவது :

“என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க “சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு”. கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்..!!

More in Cinema News

To Top