Connect with us

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்..!!

Featured

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக BCCI அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வந்த நிலையில் அவரது பதவி காலம் அண்மையில் நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை வென்ற நிலையில் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளராக தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் டிராவிட் மீண்டும் தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என தெளிவாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யார் இருப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக BCCI அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பல நெருக்கடிகளை தாங்கிக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர் என்பதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன்.

இந்திய அணி குறித்த அவரின் தெளிவான பார்வை பயிற்சியாளராக அவரை தேர்வு செய்துள்ளது. புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவும் அளிக்கும் என ஜெய் ஷா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ON THE WAY NANBA" ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதியின் GOAT படம்..!!

More in Featured

To Top