Connect with us

மும்பையை திக்குமுக்காடவைத்த குஜராத் அணி – இறுதி நேரத்தில் கிடைத்த அசத்தல் வெற்றி..!!

Featured

மும்பையை திக்குமுக்காடவைத்த குஜராத் அணி – இறுதி நேரத்தில் கிடைத்த அசத்தல் வெற்றி..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இதில் ஞாயற்று கிழமையான நேற்று அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாஹாவும், கில்லும் களமிறங்கினர். எப்போதும், போல் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் அணிக்கு தேவையான ஸ்கோரை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த விருத்திமான் சாஹா பும்ராவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

குஜராத் அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மட்டும் பொறுப்புடன் நிலைத்து ஆடி வந்த நிலையில் அவரும் பும்ராவின் அபார பந்து வீச்சால் 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார் .

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 168 ரன்கள் எடுத்து . இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது.

இதில் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர்.

அதிரடி காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் ரன் ஏதும் இன்றி டக் அவுட்டாக மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோஹித் 43 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த நமான் திர் 20 ரன்கள், டெவால்ச் பிரேவிஸ் 46, திலக் வர்மா 25, டிம் டேவிட் 11 என சென்று கொண்டிருந்த ஆட்டத்தில், 8 பந்துகளில் 19 ரன்கள் என்ற அழுத்ததுடன் களம் இறங்கினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

வந்த வேகத்தில் சந்தித்த முதல் பாலிலேயே சிக்ஸர், இரண்டாவது பாலில் ஃபோர் என்று பறக்கவிட்டு அசத்திய ஹ்ரித்திக் அடுத்த பாலில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை குஜராத் அணி வீழ்த்தியுள்ளது.

See also  இது எளிதான விஷயமல்ல - 'அமரன்' படக்குழுவுக்கு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பாராட்டு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top