Connect with us

“என்னால் முடிந்த சிறு உதவி.. சிறுவன் உயிர் காக்க பணம் கொடுத்து உதவிய GV பிரகாஷ்! என்ன ஒரு மாமனிதன்!”

Cinema News

“என்னால் முடிந்த சிறு உதவி.. சிறுவன் உயிர் காக்க பணம் கொடுத்து உதவிய GV பிரகாஷ்! என்ன ஒரு மாமனிதன்!”

சிறுவனின் உயிரை காப்பாற்றுவதற்காக GV பிரகாஷ் செய்த பண உதவி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வரும் GV பிரகாஷ் ஏற்கனவே பலருக்கு பண உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே.

ஆன்லைன் மூலம் பலருக்கு கல்வி கற்க, மேல் படிப்பு படிக்க, மருத்துவத்திற்கும் உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். சிறுவனின் மூளைக்கு அருகே கட்டி ஒன்று இருந்ததாகவும் அதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதற்காக GV பிரகாஷிடம் ஆன்லைன் மூலம் உதவி கோரிய சிறுவனுக்கு GV பிரகாஷ் ரூ.75,000 பணம் அனுப்பி உள்ளார். அதில் ’என்னால் முடிந்த சிறு உதவி ’என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஜிவி பிரகாஷுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

More in Cinema News

To Top