Connect with us

காதல் கணவருடன் முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா – வைரல் போட்டோஸ்

Cinema News

காதல் கணவருடன் முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா – வைரல் போட்டோஸ்

எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயககியாக அறிமுகமானவர் ஹன்சிகா முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் .

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என பெயர் எடுத்த ஹன்சிகா விஜய், தனுஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . இதுமட்டுமல்லாமல் பன்மொழி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் காதலரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹெல் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது முதல் திருமண நாளில் ஹன்சிகாவுக்கு அவரது காதல் கணவர் சிறப்பான தரமான பல சர்ப்ரைஸ்களை கொடுத்துள்ளார் .

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாட நினைத்த அவர் தான் கைப்பட எழுதிய 5 கடிதங்களை ஹன்சிகாவிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து அவர்கள் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் - அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

More in Cinema News

To Top