Connect with us

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!!

Cinema News

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!!

ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ள கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்கள் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குநர் ஷங்கர் . இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்திய 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஓடவில்லை என்பதால் அடுத்த படத்தில் விட்டதை பிடிக்கவேண்டும் என்ற வேகத்தில் சங்கர் தனது அடுத்த படத்தை தரமாக உருவாக்கி வருகிறார்.

ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை திறம்பட இயக்கி உள்ள ஷங்கர் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஷங்கர் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.

ராம் சரண் , கியாரா அத்வானி , எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டக்கர் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை - பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

More in Cinema News

To Top