Connect with us

ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

Cinema News

ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள `லப்பர் பந்து’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல இளம் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அதில் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் லப்பர் பந்து.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்க அவருடன் சேர்ந்து அட்டகத்தி தினேஷ்,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகவும் படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேது வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top