Connect with us

கேப்டன் விஜயகாந்த் எப்படி புரட்சி கலைஞர் ஆனார்?! இதான் விஷயமா?

Cinema News

கேப்டன் விஜயகாந்த் எப்படி புரட்சி கலைஞர் ஆனார்?! இதான் விஷயமா?

புரட்சி தலைவர் என MGR கொண்டாடப்பட்டார். அதே போல புத்திக் கூர்மையில் சிறந்து விளங்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அளவுக்கு தொலைநோக்குப் பார்வையும் புத்திக் கூர்மையும் கொண்டு சினிமாவை சீராக வழி நடத்தியதை போலவே அரசியலிலும் தேமுதிக எனும் கட்சியை ஆரம்பித்து மாபெரும் கட்சியாக உயர்த்தினார்.

புரட்சியும் கலைஞரும் சேர்ந்து விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர் என்கிற பட்டம் வைக்கப்பட்டது. அந்த பட்டத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தான் விஜயகாந்துக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் MGR மற்றும் கலைஞரின் தீவிர ரசிகர் என்பதால் தான் சினிமாவில் சிறந்து விளங்க வேண்டும் விஜயகாந்த் என புரட்சி கலைஞர் என்கிற பட்டத்தை சரியாக பார்த்து வைத்தேன் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவே த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் மறைவு சினிமா உலகத்தினரையும் பொதுமக்களையும் எந்தளவுக்கு வேதனை அடைய செய்திருக்கிறதோ, அவருடன் பல ஆண்டுகள் நண்பராக பழகி வந்த தயாரிப்பாளர் தாணுவையும் இந்த இழப்பு தலையில் இடியாக இறங்கி உள்ளது. புரட்சி கலைஞர் என்று மட்டுமில்லாமல் கருப்பு MGR என்றும் அழைக்கப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். இல்லை என்ற சொல்லே அவரது வாயில் இருந்து வராது என்றும் எந்த உதவியாக இருந்தாலும் கண்டிப்பா செய்றேன், கவலைப்படாம போங்க என்று மட்டுமே சொல்லி வந்த விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லாதது மிகப்பெரிய துயரமான விஷயம் தான். அவரது ஆன்மா சாந்தியடைய ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாபெரும் வரவேற்பை பெற்ற ஜீவாவின் பிளாக் திரைப்படம் - உலகளவில் இதுவரை செய்துள்ள எவ்ளோ தெரியுமா..!!

More in Cinema News

To Top