Connect with us

டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுத்த ஹ்ரித்திக் ரோஷனின் Fighter! படத்தின் Teaser வெளியாகி Viral!

Cinema News

டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுத்த ஹ்ரித்திக் ரோஷனின் Fighter! படத்தின் Teaser வெளியாகி Viral!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட்டர் படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தின வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. படத்தின் டீசர் காட்சிகள் அனைத்துமே தாறுமாறாக உள்ளன.

இந்த ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் திரைப்படத்தில் ஃபைட்டர் ஜெட் காட்சிகள் நிறைந்திருந்தன. அதே போல இந்த ஃபைட்டர் படமும் பெயரை போலவே ஃபைட்டர் ஜெட் படமாகவே உருவாகி உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுப்பது போல ஃபைட்டர் ஜெட் ஓட்டும் காட்சிகளில் நடித்துள்ளார்.

ஷாருக்கானின் பதான் படத்தில் கவர்ச்சி கடலாக பிகினி உடைகளில் ரசிகர்களை சூடேற்றிய தாராள குடோன் தீபிகா படுகோன் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் சேலை கட்டிக் கொண்டு ஹோம்லி லுக்கில் மாஸ் காட்டியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள ஃபைட்டர் படத்தில் ஒரே ஒரு சீனில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் கடலில் கட்டிப்புரண்டு பிகினியில் கிஸ் அடிக்கும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த ஆண்டும் சித்தார்த் ஆனந்த் படம் 1000 கோடி வசூல் ஈட்டுவது உறுதியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top