Connect with us

3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் – பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..!!

Cinema News

3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் – பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..!!

பிரபல இளம் நடிகை சொந்த படத்தின் புரோமோஷனுக்கு வருவதற்கு எக்ஸ்ட்ராவாக பணம் கேட்பது மிகவும் வேதனை அளிப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளது திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அபர்ணதி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள திரைப்படம் தான் நாற்கரப்போர் . புதுமுக இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்து நிலையில் இது நிச்சயம் சமூக நீதி குறித்து பேசக்கூடிய படமாக இருக்கும் என பலரும் கருத்து கூறி இருந்தனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது :

படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நடிகை அபர்ணதியும் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அவர் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை. புரோமோஷனுக்கு வரமாட்டோம் என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடாகவே இது மாறிவிட்டது .

புரோமோஷனுக்கு வரவேண்டுமென்றால் ரூபாய் 3 லட்சம் பணம் கொடுக்கனும் அப்போதுதான் வருவேன் என நடிகை அபர்ணதி கூறியுள்ளார்.

ஒருவர் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. நீங்கள் படத்தின் புரோமஷனுக்கு வரவேண்டும். நீங்கள் வரமாட்டேன் எனக்கூறுவது தவறு எனக் கூறினேன். அதற்கு நடிகை அபர்ணதி, இல்லை இல்லை நான் வரமுடியாது எனக் கூறிவிட்டார்

இறுதியாக நீங்கள் புரோமோஷனுக்கு வருவீர்களா மாட்டீர்களா எனக் கேட்டேன். உடனே அவர்கள் முடியாது சார், ரூபாய் 3 லட்சம் கொடுத்தால் வருகின்றேன் எனக் கூறினார். உடனே நான், ரொம்ப நன்றி.. நீங்க போனை வைங்க.. உங்களுக்கு மூன்று லட்சம் கொடுப்பதற்கு படத்திற்கு வேறுமாதிரி பப்ளிசிட்டி செய்துகொள்வோம் எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

இது போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை. மற்ற தயாரிப்பாளர்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் இதனைக் கூறுகின்றேன் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தான் நடித்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் அசோக் செல்வன் வராமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகை அபர்ணதியும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தவிர்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More in Cinema News

To Top