Connect with us

மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ சீக்கிரம் போய் கொரோனா பரிசோதனை செய்யுங்கள்..!!

Featured

மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ சீக்கிரம் போய் கொரோனா பரிசோதனை செய்யுங்கள்..!!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோன நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது . இதன்காரணமாக பொதுமக்கள் அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும் பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இந்நிலையில் உருமாறிய JN.1 கொரோனா தொற்றினால் பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் பரிசோதனையை அதிகரிக்க தற்போது பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என அறிகுறி உடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பொதுசுகாதாரத்துறை முடிவு திட்டமிட்டுள்ளது.

நோய் தொற்று உள்ளவர்களுக்கு கடுமையான இருமல் மற்றும் சோர்வு இருக்கும் இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது.

அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து மக்களும் மாஸ்க் அணிவதன் மூலம் இந்த நோயில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

குளிர்ந்த உணவுப்பண்டங்களை சாப்பிடக் கூடாது. சிகரெட் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருமும்போது கண்டிப்பாக கை மற்றும் கைக்குட்டையை மூடிக்கொள்ள வேண்டும்.

ஜேஎன்1 தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் நான்கைந்து நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டு, முழு ஓய்வு எடுத்தால் அதிலிருந்து விடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதர்வாவின் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Featured

To Top