Connect with us

இரண்டு பாகங்ககளாக உருவாகிறதா இளையராஜாவின் பயோபிக்..? வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

இரண்டு பாகங்ககளாக உருவாகிறதா இளையராஜாவின் பயோபிக்..? வெளியான டக்கர் தகவல்..!!

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இளையராஜாவின் பயோபிக் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்திய திருயுலகில் உச்சம் தொட்ட இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா . இவரது இசையில் உருவான பாடல்களை கேட்டு வளர்ந்த பலர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வருகின்றனர் .

திரையுலகில் சுமார் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இந்த மாமேதையை கொண்டாடும் விதமாக வாழ்க்கை தற்போது படமாக்கப்பட உள்ளது.

இதற்கான பூஜையும் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் தற்போது பட வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் உருவாகும் இப்படத்தில் அவரது வேடத்தில் குளோபல் ஸ்டார் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார் . இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கவும் உள்ளார் .

இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அந்த படத்தை இரண்டு பாகங்ககளாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top