Connect with us

தமிழகத்தை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் – வேதனை தெரிவித்த இயக்குநர் பா. ரஞ்சித்..!!

Cinema News

தமிழகத்தை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் – வேதனை தெரிவித்த இயக்குநர் பா. ரஞ்சித்..!!

கள்ளக்குறிச்சி அருகே விஷச் சாராயம் குடித்து இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என தமிழ் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்! என இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top