Connect with us

INDvsENG 3rd Test: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்.. காரணம் என்ன?

INDvsENG

Sports

INDvsENG 3rd Test: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்.. காரணம் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்திய கிரிக்கெட் அணி, மறைந்த தத்தாஜிராவ் கெய்க்வாட்டை கவுரவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறது.

இந்தியாவில் வாழ்ந்து வரும் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்ற தத்தாஜிராவ் கெய்க்வாட் 95 வயதில் சமீபத்தில் காலமானார். தத்தாஜிராவ் குறிப்பாக 1959 இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவை வழிநடத்தி 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

கூடுதலாக, அவரது தலைமையின் கீழ், பரோடா 1957-58 சீசனில் ரஞ்சி டிராபியில் இறுதிப் போட்டியில் சர்வீசஸை தோற்கடித்து வெற்றியைப் பெற்றது.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவரை நினைவு கூர்ந்ததுடன், சமீபத்தில் காலமான அவரை நினைவுகூரும் வகையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் என அறிவித்தது.

இதற்கிடையே, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து அணிக்கு வலுசேர்த்து விளையாடி வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் Bloody Beggar 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Sports

To Top