Connect with us

அமெரிக்காவை வச்சு செய்த இந்திய அணி – இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு..!!

Featured

அமெரிக்காவை வச்சு செய்த இந்திய அணி – இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி இந்திய அணிக்கு 111 ரன்களை இலக்காக வைத்துக்ளது.

நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் அனல் பறக்கும் போட்டியில் அமெரிக்கா – இந்தியா அணிகள் விளையாடுகிறது.

இந்த போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜஹாங்கீர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற அமெரிக்கா அணியின் ஸ்கோர் 100 தாண்டுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எதிரொலி : ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி..!!

More in Featured

To Top