Connect with us

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு..!!

Featured

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு..!!

இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது . இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்க 56 ரங்களும் டுனீத் 67 ரங்களும் எடுத்தனர்.

இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

More in Featured

To Top