Connect with us

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த சிறப்பான அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த சிறப்பான அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த சிறப்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன் . இதையடுத்து இப்படத்தின் 2 ஆம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக ஆரம்பித்தது .

இதையடுத்து பல போராட்டங்களை தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது . இந்தியன் படத்திற்கு இசை புயல் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு நம்ப ராக் ஸ்டார் அனிருத் பட்டாசாக இசையமைத்து வருகிறார்.

கலக்கலாக உருவாகி உள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்திருக்கிறது.

படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்துவந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வேற லெவலில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் பாடல், வருகிற மே 22ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சிறப்பான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா..? தளபதியின் தி கோட் பட ரிலீஸ் ப்ரோமோ வெளியானது..!!

More in Cinema News

To Top