Connect with us

எப்பா தாத்தா OTTல வராருப்பா : இந்தியன் 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இதோ..?

Cinema News

எப்பா தாத்தா OTTல வராருப்பா : இந்தியன் 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இதோ..?

கமல்ஹாசன் – சங்கர் கூட்டணியில் திரையரங்குகளில் வெளியான இந்தியன் 2 படத்தின் OTT ரிலீஸ் தேதி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் போற்றும் மக்கள் கலைஞனாக வலம் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரெடுத்த ஷங்கர் கூட்டணியில் கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படமே இந்தியன் 2.

லைகா நிறுவனத்தின் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா , எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

இந்நிலையில் இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அனிருத் இசையமைத்து பாடிய பாடல்கள் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது .

இந்நிலையில் இந்திய 2 விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘இந்தியன்-2’ திரைப்படம் வரும் 9ம் தேதி NETFLIX ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top