Connect with us

இந்திய அணி நிதான ஆட்டம் – தென் ஆப்ரிக்க அணிக்கு 212 ரன்கள் இலக்கு..!!

Featured

இந்திய அணி நிதான ஆட்டம் – தென் ஆப்ரிக்க அணிக்கு 212 ரன்கள் இலக்கு..!!

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்கள் எடுத்துள்ளது .

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இதில் கெபெர்ஹாவில் உள்ள உலக புகழ் பெற்ற மைதானத்தில் இன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.இதையடுத்து தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாய் மற்றும் ருதுராஜ் களமிறங்கினர்.

அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த திலக் வர்மாவும் 10 ரங்களில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கே.எல்.ராகுலுடன் இளம் வீரர் சாய் கைகோர்த்தார்.

ஒருபக்கம் ராகுல் நிதானமாக ஆட மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய சாய் 62 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார் . பின்னர் சாம்சன் மற்றும் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து நீதமாக ஆடிய கேப்டன் ராகுல் அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரங்களில் வெளியேறினார்.ஒருக்கட்டத்தில் 46ஆவது ஓவரில் அணைத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென் ஆப்ரிக்க அணி களத்தில் மும்மரமாக விளையாடி வருகிறது.

ஸ்கை மேன் சூரியகுமார் தலைமையிலான இளம் படை டி20 தொடரில் பட்டயகிளப்பிய நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆதிக்கம் செலுத்துமா இல்லையா என்பதை நாம் காத்திருந்தது பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top