Connect with us

கைகொடுக்காத நிசாங்காவின் அதிரடி ரன் குவிப்பு – 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி..!!

Featured

கைகொடுக்காத நிசாங்காவின் அதிரடி ரன் குவிப்பு – 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி..!!

இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 43 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது .

இதில் இன்று நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் களமிறங்கினர் . அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இருவரும் தலா 40 ரன்கள் எட்டிய நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் சூரியகுமார் அரைசதம் கடந்த நிலையில் வெளியேற அடுத்த வந்த பண்டும் 49 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 213 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் களமிறங்கினர் . ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிசாங்கா 79 ரன்னிலும் மெண்டிஸ் 45 ரன்னிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஆலவுட் ஆன இலங்கை அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்தது .

இதன்மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜெயம் ரவி நடிப்பில் உருவான பிரதர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top