Connect with us

டி20 உலக கோப்பை : இந்திய அணி அசத்தல் பேட்டிங் – வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!

Featured

டி20 உலக கோப்பை : இந்திய அணி அசத்தல் பேட்டிங் – வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வங்கதேச அணிக்கு 197 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

திட்டத்தட்ட 20 அணிகள் பங்கேற்றுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா , ஆஸ்திரேலியா , பங்களாதேஷ் , உள்ளிட்ட பல அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் Sir Vivian Richards கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது .

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் மற்றும் விராட் கோலி களமிறங்கினர் ஆரம்பம் முதல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இவர்கள் அரைசதம் கடப்பார்கள் என்று நினைத்தபோது இருவரும் ஆளுக்கு 30 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர்.

இதையடுத்து வந்த சூரியகுமார் 6 ரங்களில் வெளியேற அடுத்து வந்த ரிஷப் பண்ட் 36 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த துபே மற்றும் ஹர்டிக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.

ஒரு கட்டத்தில் 34 ரன்களில் துபே விக்கெட்டை பறிகொடுக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டியாஅரைசதம் கடந்து அசத்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 196 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தற்போது களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” - யோக்ராஜ் சிங் ஆவேசம்

More in Featured

To Top