Connect with us

‘ராயன்’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் – முரட்டு குஷியில் படக்குழு..!!

Cinema News

‘ராயன்’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் – முரட்டு குஷியில் படக்குழு..!!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திரையுலகில் அசர வைக்கும் நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த நடிகர் தனுஷ் ராயன் என்ற அவரது 50 ஆவது திரைப்படத்தின் மூலம் வெறித்தனமான இயக்குநர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் .

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரான இப்படத்தின் தனுஷுடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அசத்தலான இசையில் தரமாக தயாரான இப்படம் கடந்த 26 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் மக்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top