Connect with us

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்..? வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்..? வெளியான தாறுமாறு தகவல்..!!

பிரபல திரைப்பட இயக்குநரான இயக்குநர் செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குநர் செல்வராகவன். ஒரு இயக்குநராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

இருப்பினும் செல்வராகவனின் இயக்கத்தை பலரும் மிஸ் செய்து வருவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் உருவாக போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து செல்வராகவன் புதிய படமொன்று இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ படங்களுக்கு பிறகு செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்து பணிபுரிய உள்ளதாகவும் வருகிறார்கள். இந்தக் கூட்டணியில் வேறு யாரெல்லாம் இணைய உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top