Connect with us

மீண்டும் கூலி படப்பிடிப்பில் இணைகிறாரா ரஜினிகாந்த்..? வெளியான முக்கிய தகவல்..!!

Cinema News

மீண்டும் கூலி படப்பிடிப்பில் இணைகிறாரா ரஜினிகாந்த்..? வெளியான முக்கிய தகவல்..!!

உடல்நல கோளாறு காரணமாக கூலி படப்பிடிப்பில் இருந்து விலகி சிறிது ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டாருக்கு எந்தமாரியான கதையை உருவாக்கி வருகிறார் என தெரியவில்லை . எது எப்படி இருந்தாலும் படத்தில் ஆக்சனுக்கு பஞ்சமிருக்காது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி தற்போது ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் மேம்படும் “கூலி” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top