Connect with us

இதுதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் தொடரா – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம்..!!

Featured

இதுதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் தொடரா – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம்..!!

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக இருந்து வரும் எம்.எஸ் தோனிக்கு இது தான் கடைசி ஐ.பி.எல் தொடரா என கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சி.எஸ்.கே நிர்வாகம் இதுகுறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் 4 முறை கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையின் கீழ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி எத்தனை போட்டிகளில் வெல்ல போகிறது மற்ற அணிகளுக்கு சரியான பதிலடி கொடுத்து பிளே ஆஃப் சென்று அசத்துமா என்ற கேள்விகள் பல மனதில் இருக்க மறுபக்கம் .சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் ஐ.பி.எல் பயணம் இந்த ஆண்டோடு முடிய போகிறதா என்ற கேள்வி மனதை போட்டு உலுக்கி வருகிறது .

இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் கூகுளில் சென்று இது தோனியின் கடைசி தொடரா ? என தேடத் தொடங்கியுள்ளனர். கடந்த ஐ.பி.எல் தொடரில் எனக்கு விளையாட ஆசை தான் ஆனால் என் உடம்பு அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என உள்ளதை உள்ளபடி தோனி சொல்லிருந்தார்.

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக இருந்து வரும் எம்.எஸ் தோனிக்கு இது தான் கடைசி ஐ.பி.எல் தொடரா என்ற கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் சி.எஸ்.கே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் கூறியதாவது :

எம்.எஸ். தோனியின் கடைசி ஆண்டாக வருகின்ற ஆண்டு இருக்க முடியுமா என்பதை நாங்கள் கூறமுடியாது அதை அவர்தான் முடிவு செய்வார் . ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலை கொடுக்க விரும்புகிறேன் 10 நாட்களில் எம்.எஸ்.தோனி வலை பயிற்சியை தொடங்க உள்ளார்.வழக்கம் போல் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி சிறப்பான வெளிப்படுத்தும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top