Connect with us

ஏங்க இதுதான் உங்க சமூக நீதியா..? வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!!

Featured

ஏங்க இதுதான் உங்க சமூக நீதியா..? வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!!

கள்ளங்கபடமில்லாத பள்ளிச் சிறார்களின் மனதில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ போல் பரவிவரும் சாதிய மோதல்கள் இதுதான் நீங்கள் மார்தட்டி முழங்கி வரும் சமூக நீதியா திரு. மு.க.ஸ்டாலின் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகர்கோவில் அருகே உள்ள மருதகுளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்தப் பள்ளியில் பொன்னாக்குடி மருதகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அதில் ஜாதி ரீதியாக ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியதில் இரண்டு மாணவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வர தற்போது பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்த சம்பவம் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது :

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிச் சிறார்களிடையே முற்றிய சாதிய வன்முறையானது, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாதியை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

கள்ளங்கபடமில்லாத பள்ளிச் சிறார்களின் மனதில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ போல் பரவிவரும் சாதிய மோதல்கள், உங்கள் நிர்வாகத்திறனின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுதான் நீங்கள் மார்தட்டி முழங்கி வரும் சமூக நீதியா திரு. மு.க.ஸ்டாலின்? என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது..!!

More in Featured

To Top