Connect with us

போதையால் ஏற்பட்ட விபரீதம் – ‘ஜெயிலர்’ பட வில்லன் ஹைதராபாத்தில் கைது..!!

Cinema News

போதையால் ஏற்பட்ட விபரீதம் – ‘ஜெயிலர்’ பட வில்லன் ஹைதராபாத்தில் கைது..!!

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் விநாயகன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் குணசித்ர நடிகராக வலம் வரும் நடிகர் விநாயகன். தமிழ் , மலையாளம் என ஏராளமான படங்களில் பல அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

அதிலும் குறிப்பாக நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த இவருக்கு பாராட்டுக்கள் ஏகபோகமாக குவிந்தது.

இந்நிலையில் நடிகர் விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றபோது போதையில் விநாயகன் இருந்ததாகவும் விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்களை தாக்கிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top