Connect with us

ஜெயம் ரவியின் BROTHER படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

ஜெயம் ரவியின் BROTHER படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

ஜெயம்ரவி நடிப்பில் சத்தமின்றி உருவாகி வரும் Brother படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயம் படத்தில் தொடங்கி இன்று வரை தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் விலைமதிப்பற்ற அன்பை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி .

இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படமே “Brother”.

ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இவர்களுடன் VTV கணேஷ் , நட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘BROTHER’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top