Connect with us

வெற்றிநடை போடும் ஜீவாவின் Black திரைப்படம் – 4 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

வெற்றிநடை போடும் ஜீவாவின் Black திரைப்படம் – 4 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஜீவாவின் Black திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்பொழுது இப்படம் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜிவா . இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் பல படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார்.

அந்தவகையில் ஜீவாவின் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படமே பிளாக் . பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான பிறகு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது பிளாக் திரைப்படம் வெளியான 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது அதன்படி இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 3.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் கணிசமாக உயரும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “உங்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது ” – தனது புகைப்படத்தை காலால் மிதித்த வீடியோவிற்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி..!!

More in Cinema News

To Top