Connect with us

“ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பும் கல்யாணி ப்ரியதர்ஷன்! வெளியானது ஆண்டனி படத்தின் Trailer!”

Cinema News

“ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பும் கல்யாணி ப்ரியதர்ஷன்! வெளியானது ஆண்டனி படத்தின் Trailer!”

ஜோஷியும், ஜோஜு ஜார்ஜும் இணைந்து ஏற்கனவே பணியாற்றிய பொரிஞ்சு மரியம் ஜோஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதில், ஜோஜு ஜார்ஜுடன் கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா, ஆஷா சரத் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியிலும் ஜோஷியுடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையில் இந்தப் படம் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஜு ஜார்ஜ் படு மாஸாக இருக்கிறார். அதேபோல் கல்யாணி ப்ரியதர்ஷனோ ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் ட்ரெய்லரையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

ஆண்டனி படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரிக்க, ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜேஷ் வர்மா இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top