Connect with us

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

ஜூனியர் என்டிஆரின் முரட்டுத்தனமான நடிப்பில் உருவாகி உள்ள தேவரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அதிரடி ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இவரது முரட்டுத்தனமான நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே தேவரா.

கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் . ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வியுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

ராக் ஸ்டார் அனிருத் இசைமைக்கும் இப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சயிஃப் அலிகான் கதாப்பாத்திரத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது .

கிலிம்ப்ஸ் வீடியோவில் மல்யுத்த சண்டை வீரராக வரும் சயிஃப் அலிகான் இப்படத்தில் பைரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

இதோ அந்த கிலிம்ஸ் வீடியோ

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

More in Cinema News

To Top