Connect with us

500 கோடி கிளப்பில் இணைந்த ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ திரைப்படம்..!!

Cinema News

500 கோடி கிளப்பில் இணைந்த ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ திரைப்படம்..!!

திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்ற ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ திரைப்படம் தற்போது 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அதிரடி ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இவரது நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படமே தேவரா.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் . ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையும் போனி கபூரின் அன்பு மகளுமான ஜான்வி கபூர் நடித்துள்ளார் .

மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வியுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

ஏராளமான ஆக்சன் காட்சிகளுடன் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் தற்போது ‘தேவரா’ திரைப்படம் உலகளவில் ரூ.509 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

More in Cinema News

To Top