Connect with us

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2′ படத்தின் டிரைலர் வெளியானது..!!

Cinema News

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2′ படத்தின் டிரைலர் வெளியானது..!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2′ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் கடந்த 2019ஆம் ஆண்டு பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்திய 2. அடுத்தடுத்து பல இன்னல்களை சந்தித்த இப்படம் தற்போது தான் ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது .

ஏகபோக எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்தியன் படத்திற்கு இசை புயல் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார் .

பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஒவொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ இந்திய 2 படத்தின் ட்ரைலர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top