Connect with us

ரிலீசுக்கு காத்திருக்கும் கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் – திடீரென வந்த கொலை மிரட்டலால் பதற்றத்தில் படக்குழு..!!

Cinema News

ரிலீசுக்கு காத்திருக்கும் கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் – திடீரென வந்த கொலை மிரட்டலால் பதற்றத்தில் படக்குழு..!!

நடிகை கங்கனாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எமர்ஜென்சி’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான கங்கனாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் தற்போது படக்குழு பதற்றத்துடன் உள்ளது .

பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா. தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படமே ‘Emergency’.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியில் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை நடிகை கங்கனா எழுதி இயக்கி உள்ளார் .

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை கங்கனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

அந்த வீடியோவில் இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்தால் சர்தார்கள் உங்களை காலணியால் அடிப்பார்கள். நீங்கள் ஏற்கெனவே அறை வாங்கியிருக்கிறீர்கள். நான் ஒரு இந்தியன். நான் என்னுடைய நாட்டில், குறிப்பாக மகாராஷ்டிராவில் உங்களை எங்காவது பார்த்தால், எங்களுடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் உங்களை காலணியால் வரவேற்போம் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top