Connect with us

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

சூர்யாவின் வெறித்தனமான நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா . இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று படமே கங்குவா .

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஏராளாமான தொழில்நுட்ப கலைஞர்கள் இரவு பகலாக வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது .

கலக்கல் நாயகன் சூர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகரக்ள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெளியான 5 நாட்களில் தளபதியின் GOAT திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..!!

More in Cinema News

To Top