Connect with us

திரையரங்கை மிரட்ட வரும் கங்குவா – புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

திரையரங்கை மிரட்ட வரும் கங்குவா – புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

சூர்யாவின் அசுரதனமான நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள “கங்குவா” படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அசத்தலான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள திரைப்படமே கங்குவா .

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னட,உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது .

இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள கங்குவா படத்தின் வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கிக்கான பரிசு கொடுத்த நயன்தாரா - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top