Connect with us

பூஜையுடன் தொடங்கியது கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் – வைரலாகும் பூஜா கிளிக்ஸ்..!!

Cinema News

பூஜையுடன் தொடங்கியது கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் – வைரலாகும் பூஜா கிளிக்ஸ்..!!

கார்த்தியின் நடிப்பில் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட சர்தார் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனது எதார்த்த நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி . அண்ணன் சூர்யாவை போல் தம்பி கார்த்திக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

பருத்தி வீரனில் ஆரம்பித்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் . பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில்
இரு வேடங்களில் வந்த கார்த்தியின் நடிப்பும் படத்தின் கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்ததால். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாக பட நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top