Connect with us

புதிய படத்தில் இணையும் கவின் – நயன்தாரா – போட்டோவுடன் சஸ்பென்ஸ் வைத்த தயாரிப்பு நிறுவனம்..!!

Cinema News

புதிய படத்தில் இணையும் கவின் – நயன்தாரா – போட்டோவுடன் சஸ்பென்ஸ் வைத்த தயாரிப்பு நிறுவனம்..!!

கவின் – நயன்தாரா இணையும் புதிய படம் குறித்த டக்கர் அறிவிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இளம் நடிகர் தான் கவின் . கைவிட்டு எண்ணும் அளவிற்கு படம் நடித்திருந்தாலும் எண்ணவே முடியாத அளவிற்கு கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் படம் இவருக்கு மேலும் பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்ததுடன் பல மாஸ் பட்ஜெட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ஏற்கனவே இவரது லேன் அப்பில் ஏரளமான படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது கவின் மற்றும் நயன்தாரா இணையும் புதிய படம் உருவாக உள்ளதாக 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் அழகிய போட்டோவுடன் மறைமுகமாக தெரிவித்துள்ளது.

கவின் மற்றும் நயன்தாரா காம்போ விரைவில் என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் தற்போது செம குஷியில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரிலீஸ்க்கு முன்பே சாதனை - வெளிநாடுகளில் முன்பதிவில் கலக்கும் 'அமரன்' திரைப்படம்..!!

More in Cinema News

To Top