Connect with us

கவினின் Bloody Beggar படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

கவினின் Bloody Beggar படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

கவினின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள Bloody Beggar படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின் .தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைபடமே BLOODY BEGGAR .

பிரபல இளம் இயக்குநர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி வருகிறார்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சிறப்பான இனிப்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 31ம் தேதி வெளியாக உள்ளதாகவும் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் எனவும் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “உங்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது ” – தனது புகைப்படத்தை காலால் மிதித்த வீடியோவிற்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி..!!

More in Cinema News

To Top