Connect with us

கவினின் ‘Bloody Beggar’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

கவினின் ‘Bloody Beggar’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

தமிழ் சினிமாவின் கலக்கல் ஸ்டாராக வலம் வரும் கவின் நடிப்பில் உருவாகி உள்ள Bloody Beggar படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சின்னத்திரையில் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் கலக்கல் நாயகனாக வலம் வரும்பவர் நடிகர் கவின் . அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றிப்படமாக உருவெடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து கவின் நடிப்பில் அடுத்ததாக உருவான திரைப்படமே BLOODY BEGGAR . இயக்குநர் நெல்சன் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி உள்ளார்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இத்திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘Bloody Beggar’ படத்தின் ட்ரெய்லர், நாளை மறுநாள் (அக்.18) வெளியாக உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எச்சரிக்கை - மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி..!!

More in Cinema News

To Top