Connect with us

புயல் பாதிப்பால் நடைபெற்ற மீட்பு பணிகள் என்னென்ன – பொதுவெளியில் விளக்கம் கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு…

Featured

புயல் பாதிப்பால் நடைபெற்ற மீட்பு பணிகள் என்னென்ன – பொதுவெளியில் விளக்கம் கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு…

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் பல அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ள நிலையில் மீட்பு பணிகள் குறித்து ஒருபக்கம் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டி வந்தாலும் மறுபக்கம் அடைப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிபட்டு வருவதாக வசைபாடியும் வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு மீட்பு பணிகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்:

சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95% பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் மின் விநியோகமும் சீராக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனது சிறுவயது நினைவுகளை மீண்டும் எனக்குள் கொண்டுவந்த படம் - மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்..!!

More in Featured

To Top