Connect with us

கோலியின் அபார சதத்தால் தலைதூக்கி நின்ற பெங்களூரு – ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு..!!!

Featured

கோலியின் அபார சதத்தால் தலைதூக்கி நின்ற பெங்களூரு – ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் SAWAI MANSINGH கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RCB – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடி காட்டி வந்த ஜோடி பவர் பிலேயில் தங்களுக்கு தேவையான ரன்களை பக்காவாக எடுத்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்த இந்த பக்கம் கேப்டன் பிளிஸ்சிஸ் அவர்களும் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருபக்க கோலி அதிரடியில் மிரட்ட மறுபக்கம் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்துகளை துவம்சம் செய்த கோலி 71 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து களத்தில் இறுதிவரை கெத்தாக இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 183 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவ.10ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Featured

To Top