Connect with us

டெல்லியை புரட்டிப்போட்ட கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!!

Featured

டெல்லியை புரட்டிப்போட்ட கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது .

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் – ஃபில் சால்ட் களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த சால்ட் 18 ரன்களில் அவுட்டானார் . அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி – சுனில் நரைனுடன் இணைந்து டெல்லி பந்துகளை நாலாபுறமும் விளாசினர்.

தனது அபார ஆட்டத்தால் 85 ரன்களை குவித்த சுனில் 13ஆவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் வெளியேறினார்.

இதையடுத்து ரஸ்ஸல் – ஸ்ரேயஸ் சிறப்பான பாட்னர்ஷிப் அமைக்க, அதிரடியில் மிரட்டினார் ரஸ்ஸல் . மறுபுறம் அதிரடி காட்ட தொடங்கிய 18 ரன்களில் வெளியேற பின்னர் வந்த ரின்கு சிங் வந்த வேகத்தில் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களுடன் நடையைக்கட்டினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 272 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 273 ரன்களை சேர்ந்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. இமாலய இலக்கை விரட்ட பொறுப்புடன் விளையாடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், அபிஷேக் போரல், டேவிட் வார்னர் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் .

அவர்களை தொடர்நது வந்த கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ் இணைந்து அதிரடியாக ஆட தொடங்கினர்.

25 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய பந்த், வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி தனது விக்கெட்டை இழக்க . அடுத்த பந்தில் அக்சர் படேலை வெளியேற்றினார் வருண். ஸ்டப்ஸ், 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சீரான இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி,166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

See also  தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top