Connect with us

தனுஷின் ‘குபேரா’ நடிகை ராஷ்மிகா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

தனுஷின் ‘குபேரா’ நடிகை ராஷ்மிகா – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

குளோபல் ஸ்டார் தனுஷின் 51-வது படமாக உருவாகி வரும் குபேரா படத்தில் நடிகை ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தற்போது அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல மொழிகளில் பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருவதுடன் ராயன் என்ற படத்தை இயக்கியும் அதில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் பன்முக திறமைகொண்ட இந்த கலைஞனின் 51-வது படமாக உருவாகி வரும் படம் தான் குபேரா . சேகர் கம்முலா இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷுடன் சேர்நது நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா ஹிந்தி , தமிழ் என பல படங்களில் பிஸியாகி நடித்து வரும் நிலையில் இவரது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top