Connect with us

தாமதமானாலும் தரமாக வெளியானது லால் சலாம் படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

தாமதமானாலும் தரமாக வெளியானது லால் சலாம் படத்தின் ட்ரைலர்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் சிறப்பான தரமான ட்ரைலர் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .

லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடைத்துளள்னர் .

தனது மகளின் ஆசைக்காக மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது .

இன்று மாலை ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தின் ட்ரைலர் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது .

இந்நிலையில் தற்போது லேட்டாக வந்தாலும் கெத்தாக வந்தான் பார் என்று சொல்லும் வகையில் இப்பட்ட்டத்தின் சிறப்பான தரமான ட்ரைலர் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த ட்ரைலரை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்..!!

More in Cinema News

To Top