Connect with us

ரிலீசாகி நீண்ட நாட்களுக்கு பின் OTT-யில் வெளியாகும் லால் சலாம்..? எப்போ ரிலீஸ் தெரியுமா..?

Cinema News

ரிலீசாகி நீண்ட நாட்களுக்கு பின் OTT-யில் வெளியாகும் லால் சலாம்..? எப்போ ரிலீஸ் தெரியுமா..?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான லால் சலாம் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படமே லால் சலாம் . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் என்ட்ரி கொடுக்க அவருடன் சேர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் கோலாகலமாக வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் வசூலும் மந்தமாக தான் இருப்பதாக திரை துறை வட்டாரங்கள் கிசுகிசுத்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி OTT-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் படக்குழு சார்பில் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top